Header Ads



புனித பூமியில் மத முரண்பாடுகள் ஏற்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறது - சஜித்

மதவிவகார அமைச்சு அன்று மதஸ்தலங்களை நிறுவியது. ஆனால் இந்த அமைச்சு தற்போது மத ஸ்தலங்களை அகற்றி வருகிறது என ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தனது தந்தை ஆர். பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது ஏனைய மதங்களின் மதத்தலங்களை நிறுவியதுடன், அதன் அபிவிருத்திப் பணிகளுக்கும் உதவினார். அன்று புத்தசாசன அமைச்சு என தனியான அமைச்சொன்று இருந்தது. இன்று அனைத்து மதங்களுக்கும் பொதுவான மத விவகார அமைச்சே உள்ளது.
யுத்தம் நிறைவுக்கு வந்துள்ள போதிலும் இன, மதங்களிடையே முரண்பாடுகள் வளர்ந்து வருகின்றன. தம்புள்ளை புனித பூமியில் மத முரண்பாடுகள் ஏற்படுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலைமைகளில் செயற்படுவதற்கு இலங்கையில் சட்டரீதியான விடயங்கள் உள்ளன. சட்டத்தின்படி செயற்பாடானது வேறு வழிகளில் செயற்படப் பார்க்கிறார்கள். மத விவகார அமைச்சுப் பொறுப்பிலுள்ள பிரதமர் இது பற்றி தம்புள்ளையில் கலந்துரையாடல் நடத்தினார். எல்லாம் விநோதமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.