புலிகள் இல்லாமல் போனபின், சிலர் அதே பாணியில் செயற்பட முனைவு - றிசாத் பதியுதீன்
திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களது காணிப்பிரச்சினைக்கு தீர்வுகான தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கையெடுக்க கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும்,அக்குழு சகல முஸ்லிம் கிராமங்களுக்கும் சென்று இப்பிரச்சினைக்குள்ளான முஸ்லிம்களை சந்தித்து விபரங்களை பெற்று அவற்றை தமக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா, மூதூர்,தோப்பூர், முள்ளிப்பொத்தான, புல்மோட்டை,திருகோணமலை,கப்பல் துறை,குச்சவெளி,நிலாவெளி,தம்பலாகம் கிராமங்களுக்கு, விஜயம் செய்த கட்சியின் தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீன் அப்பிரதேச மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இதன்போது அங்குள்ள மக்கள் தாங்கள் எதிர் கொள்ளும் காணிப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோளினை முன்வைத்தனர், இது குறித்து அமைச்சர் தகவல் தெரிவிக்ககையில்,
திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் வாழந்த பிரதேசங்களில்,கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அவர்களது இடங்களாக பயன்படுத்திவந்துள்ளனர்.ஜனாதிபதியின் செயற்பாட்டால் சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப்பிரதேச மக்கள் தமது காணிகளில் மீள் சென்று குடியமரவும்,தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் பல பிரச்சினைகளை எதிர் கொண்டுவருகின்றது.
இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களும்-சிங்களவர்களும் மிகவும் நெருக்கமாக நல்லுறவுடன் வாழுகின்றனர்.ஆனால் இப்பகுதிகளில் பணியாற்றும் சில பெரும்பான்மை அதிகாரிகள்,அதில் பாதுகாப்பு தரப்பில் பணியாற்றும் சிலரும்,இம்முஸ்லிம்கள் தமது காணிகளுக்கு செல்வதற்கு தடையேற்படுத்திவருவதாக எனது கவனத்திற்கு மக்கள் கொண்டுவந்துள்ளனர்.
இவ்வாறு இப்பிரதேச முஸ்லிம்களுக்கு ஒரு போதும் அநியாயம் இழைக்க நானும்,எனது கட்சியும் இடம் கொடுக்கமாட்டோம்.இது குறித்து நடவடிக்கையெடுக்க எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும்,அங்கும் சென்று நியாhத்துக்காக குரல் கொடுப்போம்.
இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்கள் அச்சமற்ற சூழலில்,அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் பாரிய தியாகங்களை செய்துள்ளோம்.அவ்வாறு செய்த எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் எனில், இந்த நாட்டின் ஜனாதிபதியுடனும் இது குறித்து கவனம் செலுத்துமாறும் நாம் கோறிக்கை முன்வைப்போம்.சிலர் மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டு மக்களும்,சொத்துக்களும் அழிவதைNயு விரும்புகின்றனர்.
இவர்களது ஆசைகளை அல்லாஹ் நிராசையாக ஆக்கிவிடுவான் என்ற பிரார்த்தனைகiளில் எமது மக்கள் ஈடுபட வேண்டும். புல்மோட்டையில் புலிகள் பயன்படுத்திய பிரதேசங்கள்,மீண்டும் மக்களிடம் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனை அனுமதிக்க முடியாது அதற்காக இரானுவம்,மற்றும் பொலீஸார் ஆகியோரை அழைத்து பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.
உரிய முஸ்லிம்களது காணிகள் அவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.எவரின் காணியினையும் எமது மக்கள் அபகரிக்கவில்லையென்பதை பொதலீஸாரின் கவனத்திற்கு நாம் கொண்டுவந்துள்ளோம்.
எமது அரசியல் பலத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்,ஆனால் அரசியல் தலைமைகள் இம்மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தவறியதன் விளைவாகவே,இன்று இம்மக்கள் விரக்த்தியியின் உச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
அன்று விடுதலை புலிகள் செய்ததை அவர்கள் இல்லாமல் போன பிறகும்,வேறு சிலர் அதே பாணியில் செயற்பட முனைவதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,சுதந்திர இலங்கை தேசத்தை உருவாக்குவதில் இலங்கை முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்பும்,இந்த நாட்டில் பயங்கரவாதமற்ற சூழலை ஏற்படுத்த ஆற்றிய உதவிகளையும் எவரும் மறந்து செய்றபட முடியாது என்ற செய்தியினையும் பகிரங்கமாக சுட்டிக்காட்டினார்.
Post a Comment