Header Ads



குவைத் தெருவோரத்தில் இலங்கையரின் சடலம் மீட்பு

குவைத்தின் - பஹஹீல் நகரில் வீதி ஓரத்தில் இருந்து இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குவைத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹஹீல் நகரில் வீதி ஓரத்தில் நபரொருவர் மயக்கமுற்று விழுந்து கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அதிகாரிகள் அவ்விடத்திற்கு மருத்துவ முதலுதவிக் குழுவை அனுப்பி வைத்துள்ளனர்.

இக்குழு உடன் அவ்விடத்திற்குச் சென்று பார்த்தபோது குறித்த இலங்கையர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு நபர் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து குவைத் பொலிஸாரார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இலங்கையர் என உறுதிப்பட்டுத்தப்பட்ட போதும் அவர் யார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. (அததெரன)

No comments

Powered by Blogger.