கிழக்கு மாகாண சபை ஆட்சியை முஸ்லிம் கட்சியே கைப்பற்றும் - தேசப்பற்றுள்ள இயக்கம்
கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால் முஸ்லிம் அரசியல் கட்சியே ஆட்சியை கைப்பிடிக்குமென்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் கிழக்கு, வடமத்திய, சப்ரகமுக மாகாண சபைகளை கலைத்து தேர்தல்களை நடத்தவுள்ளது. கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றால் முஸ்லிம் அரசியல் கட்சியொன்றே வெற்றி பெற்று ஆட்சியமைப்பது நிச்சயமாகும். இவ்வாறானதோர் சூழ்நிலையால் பிள்ளையான், கருணா முதலானோர் ஓரம் கட்டப்படுவார்கள்.
அத்தோடு இந்தியாவும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை பரவலாக்கும் யோசனையை கைவிட்டு மாவட்ட ரீதியாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் நிலைப்பாட்டை மேற்கொள்ளும். இதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ் அரசியல் கட்சிகளால் கிழக்கில் செயற்பட முடியுமென்றும் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

Post a Comment