பாணின் விலை 58 ரூபாவாக உயர்வு
பாணினின் விலை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது.
சனிக்கிழமை மாலை பேக்கரி உரிமையாளர்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 450 கிராம் பாண் இறாத்தலொன்று 58 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மாவின் விலை 8 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டடையடுத்தே பாணின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment