Header Ads



பிறந்த குழந்தையை குளிசாதனப் பெட்டியில் 5 வருடங்களாக வைத்திருந்த தாய் கைது

ரஷ்யாவில், பிறந்து சில மணிநேரம் ஆன பெண் குழந்தையை ஃபிரிட்ஜூக்குள் வைத்து ஐந்து ஆண்டுகளாக பாதுகாத்த கொடூரத்தாயை போலீசார் கைது செய்தனர். அவருக்கு கோர்ட் தண்டனை விதித்தது.ரஷ்யாவின் வடக்குமாகாணத்தில் ,ரியாநெவோஸ்டி நக‌ரில் வசித்து வந்தவர் லையோட்மிலா சிமிர்நோவா (38). இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரசவ வலி ஏற்படவே தனது வீட்டிலேயே பெண் குழந்தையை பெற்றார். உடனே அக்குழந்தையை லேசான துணியால் சுற்றி வீட்டின் ஃபிரிட்ஜூக்கு வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த2011-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதியன்று சிமிர்நோவாவின் நண்பர் ஒருவருக்கு, இறைச்சி சமைத்து கொடுக்க ஃபிரிட்ஜூனை திறந்தார். அப்போது அங்கிருந்த நண்பர் துணியால் சுற்றப்பட்டிருந்ததை பிரித்து பார்த்த போது குழந்தை பிணமாக உறைந்துபோய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது தொடர்பாக போலீசில் புகார் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்த கொடூரத்தாய் அர்க்ஹாங்லேஸ் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அவர் குற்றவாளி என நிரூபணம் ஆனதால் 22 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.