வன்னியில் பிறந்த நான் 20 வருடமாக அகதி - இந்தியாவிடம் வேதைனைப்பட்ட றிசாத்
கடந்த 30 வருட யுத்தத்தால் அழிந்து போனதை ஒரே நாளிலோ, அல்லது ஒரு மாதத்திலோ கட்டியெழுப்புவது சாத்தியமானது அல்ல. இருந்த போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தீர்க்கதரிசனமான செயற்பாட்டால் இன்று எதிர்பார்த்ததை விட அதிக அபிவிருத்திகள் இடம் பெறுவதாக கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் முல்லைத்தீவில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். முள்ளியாவல தண்ணீரூற்று பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத்தினையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர். அதனையடுத்து இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றினார்.மேலும் அவர் அங்கு கூறுகையில்,
1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும் 30 ஆண்டுகள் எங்களால் சுதந்திரத்தை பயங்கரவாதம் காரணமாக அனுபவிக்க முடியாது போனது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூர நோக்கு செயற்பாட்டினால் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு இன்று இலங்கை வாழ் சகல மக்களும் மகிழ்வுடன்இவாழ்ந்து வருகின்றனர்.
நான் வன்னியில் பிறந்தவனாக இருந்த போதும் 20 ஆண்டுகள் வன்னி மண்ணில் காலடி எடுத்து வைக்கமுடியாத நிலை காணப்பட்டது. 1990 ஆம் ஆண்டில் நானும் ஏனைய முஸ்லிம் சகோதரர்களுடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டேன்.இது இவ்வாறு இருக்க வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில்இவடக்கில் மற்றும் கிழக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.வடக்கில் பாரிய அபிவிருத்தி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மீ்ள்குடியேற்ற பணிகள் மிகவும் துரிதமாக இடம் பெற்று வருகின்றன.
கண்ணவெடி அகற்றும் பணிகளும் சமாந்தரமாக இடம் பெற்றுவருகின்றது.இவைகள் எல்லாம் மக்களின் பாதுகாப்பான நல்வாழ்வுக்காக அரசாங்கம் எடுக்கும் திட்டங்களாகும்.இதில் இனப்பாகுபாடுகள் காட்டப்படுவதில்லை.குறிப்பாக இந்தியாவானது புதியஇபழைய அகதிகள் என்ற பார்வையின்றி உதவிகளையும் சகலருக்கும் அளித்துவருகின்றது.இது மெச்சக் கூடியதும், வரவேற்கப்படக் கூடியதுமாகும்.
அதே போன்று இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி செய்துவருவதற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அமைச்ர் றிசாத் பதியுதீன் கூறினார்.

Post a Comment