வீட்டில் தனித்திருந்த 2 ஆசிரியர்கள் - கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு - யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் ஆசிரியர்களான இரு சகோதரிகள் கிணற்றிலிருந்து சடலமாக இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.கொட்டடி நமசிவாய பாடசாலை ஆங்கில பாட ஆசிரியரான சங்கரப்பிள்ளை சாளினி (கீதாஞ்சலி), யாழ்.கொக்குவில் ஆங்கில பாட ஆசிரியரான சங்கரப்பிள்ளை தனுஜா (சொர்ணலதா) ஆகிய இரு இளம் சகோதரிகளே மரணமடைந்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இவர்கள் இருவரின் சடலமும் யாழ்.பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு குறித்த சகோதரிகளின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், அவர்கள் இரவரும் நேற்று இரவு தனிமையிலேயே வீட்டில் இருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர்களது மரணம் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பது இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment