Header Ads



முஸ்லிம்களுக்கு 16 ஆம் திகதி நியாயம் கிடைக்குமா..?

எம்.எல்.லாபிர், ரஸீன் ரம்ஸீன்

காளை மாடொன்றை அறுப்பதற்கு யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 16 ஆம் நடைபெறவுள்ளது.

அதேவேளை குறித்த காளைமாடு தொடர்பில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதனை உரியவரிடமிருந்து கொள்வனவு செய்வது தொடர்பான அறிவித்தலொன்று யாழ் தமிழ் பத்திரிகையொன்றில் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரை மேற்கோள்காட்டி பிரசுரமாகியுள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த பத்திரிகை காளைமாடு தொடர்பில் தமிழ் முஸ்லிம் உறவினை சீர்குலைக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்து பீடங்கள் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளின் பேரிலேயே தடை காளை மாட்டை அறுக்க தடைவிதித்தாக இமெல்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதும் மாநகர சபையின் அங்கீகாரம் பெற்ற அனுமதிப்பத்திரம் பெறப்பட்டதும், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் சிபாரிசைப் பெற்றதும், சுகாதார பரிசோதகரின் அனுமதி பெற்றதுமான குறித்த காளை மாட்டை அறுப்பதற்கு ரிய தடையை அரச அதிபர் பொலிஸாரினூடாக பிறப்பித்தமை தொடர்பில் முஸ்லிம்களிடையே பலத்த அதிருப்த்தி நிலவுகின்றமை இங்கு கவனிக்கத்தக்கது.


எமது முந்திய செய்தி

http://www.jaffnamuslim.com/2012/03/blog-post_6908.html
யாழ்ப்பாண முஸ்லிம்கள் இறைச்சிக்காக மாடு வெட்டுதலும்இ தவறான கருத்துக்களும் (படங்கள் இணைப்பு)

இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த காளை மாடு

2 comments:

  1. இவ்வளவு காலமும் யாழ்ப்பாணத்தில் மாடு அறுக்கவில்லையா?

    இப்பொழுது மட்டும் ஏன் பிரச்சினை என்றால், சும்மா இருந்த
    சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்று
    நோட்டீஸ் அடித்து விநியோகித்து மாடு அறுக்க
    முயன்றதாகும்.

    நோட்டீஸ் அடிப்பதற்கு மாடு என்ன முனிசிபல் இலைக்ஸனா
    கேட்கப் போகின்றது?

    ReplyDelete
  2. தாம்தான் (அரைப் )படித்தவர்கள், தமக்குத்தான் எல்லாமே தெரியும், தாம்
    சொல்கின்ற படிதான் சொனகதேருவில் எல்லோருமே நடக்க வேண்டும், மார்க்கமும் தமக்கு மட்டும்தான் தெரியும்
    என நினைக்கும் குறிப்பிட்ட
    சில அறிவாளிகள் (அறிவிலிகள்) தான் அதிகமான பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றனர்.

    சொனகதேருவுக்கு உரிமை கொண்டாடுவதும், பள்ளிகளில் சண்டித்தனம், அடாவடித்தனம் பண்ணுவதும்,
    கூச்சல் போடுவதும், இவர்களால் ஏற்படுத்தப் பட்ட பிரச்சினைகளாகும்.

    1990 இல் புலிகளின் முன்னிலையில் இவர்களின் வீரங்களும், சண்டித்தனங்களும் வாய் வீச்சுக்களும் எங்கே
    போயிருந்தன என மீளக் குடியேறியுள்ள ஏழை மக்கள் கேட்கின்றனர்?


    சோனக தெருவில் குடியேறியுள்ள மக்களில் அதிகமானவர்கள் ஏழைகளாகவும், செல்வாக்கு குறைவானவர்களாகவும் இருக்கும் நிலையில் இக்குறிப்பிட்ட நபர்கள்
    தொடர்ந்தும் பல்வேறு வடிவங்களில் சிக்கல்களை
    ஏற்படுத்தவே முனைகின்றனர். இவர்கள் திருந்தட்டும் அல்லது திருந்த மட்டாதவர்களாக இருந்தால், அல்லாஹ் இவர்களை மட்டும் கடுமையாக
    தண்டித்து சொனகதேருவை காப்பாற்றட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.