Header Ads



வானத்திலும் தொழுவதற்கு ஏற்பாடு..!

விமானத்தில் பயணிக்கும் போது தொழுகை நேரத்தை கணிக்க புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் விமான பயணிகள் எதிர்நோக்கும் தொழுகைநேர பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நேரக் கணிப்பு முறை மூலம் பயணிக்கும் நகரம், விமான நிலையம் தொடர்பில் தகவலளிக்கப்படும் போது தொழுகை நேரத்தை அறிந்துகொள்ள முடியும். க்ரெசண்ட் ரேட்டிங் நிறுவனத்தின் வெப்தளத்திற்குள் பிரவேசித்து இறங்கும் விமானத்தளம் மற்றுமு; விமான சேவை நேரம் ஆகியவற்றை குறிப்பிடுவதன் மூலம் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் இச்சேவையை மேலும் இலகுபடுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ப்படுவதாகவும், அதன் மூலம் முன்கூட்டியே தொழுகை நேரத்தை கணிப்பிடும் பொறுமுறையொன்றை அமுல்படுத்த உத்தேசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://www.crescentrating.com/en/air-travel-prayer-time-calculator.html


No comments

Powered by Blogger.