பெல்ஜியத்தில் ஷியா வணக்கஸ்தலம் மீது தாக்குதல் - இமாம் கொல்லப்பட்டார்
பெல்ஜியம் தலைநகர் பிரசல்சிலுள்ள ஷியா பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல் இமாம் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை பள்ளிவாசல் மீது பட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலின் பெரும் பகுதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் தொழுகைக்காக காத்திருந்த போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சட்டத்துக்குப் புறம்பான கொலைகளை ஆதரிக்க முடியாது.
ReplyDeleteஷீயா மதத்தினர் தங்களது வணக்கச்தலங்களை ''மஸ்ஜித்'' அதாவது
தமிழில் நாம் பள்ளிவாசல் என்று அழைக்கின்றோமே, அவ்வாறு அழைப்பதில்லை.
ஷீயா மதத்தினர்களின் வணக்கஸ்தலங்கள் ''ஹுசைனியா'' என்ற பெயரிலேயே
அழைக்கப்படுகின்றன.
அங்கு நடைபெறும் வணக்கத்தை ''தொழுகை'', அதாவது ''ஸலாஹ்'' என்று அழைக்க முடியாது.
அங்கே அவர்கள் ஒரு விதமாக குனிந்து எழும்பி கூத்துப் போடுகின்றனர்.
நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் அவர்கள் கற்றுத் தந்த தொழுகைக்கும்,
ஷீயா மதத்தினரின் குனிந்து எழும்பும் கூத்து வணக்கத்துக்கும் காததூரம்.
இது குறித்து யாராவது முஸ்லிம் மாற்றுக் கருத்து கொண்டிருந்தால், அவரது
மறுப்பை பதியட்டும். இன்ஷா அல்லாஹ் விளக்கமளிக்கப்படும்.
நஸீர்