உணவு நஞ்சாகியதன் விளைவு..? டுபாயைச் சேர்ந்த தாயும் குழந்தையும் இலங்கையில் மரணம்
கொழும்பு, வத்தளைப் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் டுபாய் நாட்டைச் சேர்ந்த 22 வயதான தாயும் அவரது 6 மாதக் குழந்தையும் இன்று புதன்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளனர்.
இந்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தந்தையார் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்த இவர்கள், வத்தளைப் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தனர்.
சுகவீனமடைந்த நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உணவு நஞ்சாகியதன் காரணமாக இவர்கள் மரணமடைந்திருக்கலாமென வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்

Post a Comment