Header Ads



யாழ்ப்பாணம் ஓட்டுமடச் சந்தியில் பாரிய விபத்து



யாழ்ப்பாணம் ஓட்டுமடச்சந்தியில் செவ்வாய்கிழமை  மாலை கனரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதியதால் கம்பம் சரிந்ததுடன் அப் பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.

மானிப்பாயிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த பதினாறு சக்கரங்கள் கொண்ட கனரக வாகனம் ஒன்று ஓட்டுமடம் சந்தியில் திரும்ப முற்பட்டவேளை அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்துடன் மோதியது. இதனால் மின்கம்பம் சரிந்தது. கம்பத்தில் மின்கம்பிகள் அறுந்து விழ்ந்தன. இதன் காரணமாக யாழ். - மானிப்பாய் வீதி போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டதுடன் மின்சாரமும் தடைப்பட்டது.

இச்சம்பவத்தில் தெய்வாதீனமாக, எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை. அங்கிருந்த கடைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகள் என்பன சேதத்திற்குள்ளாகின.

No comments

Powered by Blogger.