Header Ads



ஜெனீவாவில் ஒன்றுபட்ட இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள்

சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள இலங்கை அரசாங்கத் தூதுக்குழுவில் இடம்பிடித்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் செயற்படுகின்றனர்.

ஜெனீவா வந்துள்ள இலங்கை அரசாங்க பிரதிநிதிகளில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து விமானத்தில் ஜெனீவா வரும்போதும் ரவூப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் இணைந்தே வந்துள்ளனர்.

அத்துடன் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ஜெனீவாவில் மிகவொற்றுமையுடனும் செயற்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொண்டுள்ளனர். ஜிம் (உடற்பயிற்சி) க்கும் இந்த 3 முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஒன்றாகவே சென்றுள்ளனர்.

ஜெனீவாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் தமது அரசியல், கட்சி மற்றும் பிரதேச வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு இலங்கை முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் சர்வதேசப் பிரதிநிதிகளையும், முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களையும் இந்த 3 முஸ்லிம் அரசியல் வாதிகளும் ஒற்றுமையாக சந்தித்துள்ளனர்.

இத்தகவல்களை ஜெனீவாவில் வைத்து எம்முடன் பகிர்ந்துகொண்ட குறிப்பிட்ட 3 முஸ்லிம் அரசியல் வாதிகளும் தமக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையும், நாட்டு நலனும் பிரதானமானதெனவும் இதன்பொருட்டு தாம் இணைந்து செயற்படுவதில் எத்தகைய  சிக்கல்களும் இல்லையெனவும் எதிர்காலத்திலும் தமது ஒற்றுமையான செயற்பாடுகள் தொடருமெனவும் கருத்து வெளியிட்டனர்.

தாம் மூவரும் ஜெனீவாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிச்செல்லும் போதும் ஒற்றுமையாகவே இணைந்தே செல்லவுள்ளதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா யாழ் முஸ்லிம் இணையத்திற்கு  தெரிவித்தார்.

1 comment:

  1. ஜெனீவா வைப் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்..!

    ReplyDelete

Powered by Blogger.