Header Ads



மஹிந்த அரசாங்கம் போலி தேசப்பற்று வேடத்தை போட்டுள்ளது - முஜீபபுர் ரஹ்மான்


இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முறையாக பாதுகாத்திருந்தால் ஜெனீவா தீர்மானங்களுக்கு அரசாங்கம் அஞ்ச வேண்டியதில்லை. பொது மக்களையும் நாட்டையும் சீரழித்து விட்டு தற்போதைய அரசாங்கம் போலி தேசப்பற்று வேடத்தை போட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

ஜெனீவா மனித உரிமை பேரவையில் நாட்டிற்கு எதிரான தீர்மானங்கள் முன் வைக்கப்படுமாயின் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். ஏனெனில் இன்றும் நாட்டில் மனித உரிமைகளோ நல்லாட்சிகளோ ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  இது தொடர்பாக மேல் மாகாண உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கூறுகையில், 

நாட்டில் எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களும் விலையேறி விட்டுள்ளது. பொது மக்களால் தற்போதைய வாழ்க்கை செலவை ஈடுசெய்ய முடியவில்லை. இலங்கையில் மீண்டும் மக்கள் பிரச்சினைகள் தலைதூக்கிக் கொண்டு வருகின்றது. பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாத சூழ்நிலையில் தற்போது அரசாங்கம் ஜெனீவா மனித உரிமை பேரவையின் மாநாட்டை காரணம் காட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றது. 

ஜெனீவாவில் நாட்டிற்கு எதிராக தீர்மானங்களை சர்வதேச நாடுகள் மேற்கொள்ளுமாயின் அதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் கூற வேண்டும். தாய் நாடு மீது அரசாங்கத்திற்கு பற்று இருந்தால் இவ்வாறான மோசமான சூழ்நிலைகளுக்கு நாட்டை தள்ளி விட்டிருக்காது எனக் கூறினார்.

No comments

Powered by Blogger.