Header Ads



பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு படை முகாம்களில் பயிற்சி - 20 ஆம் திகதி ஆரம்பம்

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சித் திட்டம் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
 
28 மத்திய நிலையங்களில் மூன்று வாரங்களுக்கு மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படவுள்ளதென உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இராணுவ கடற்படை விமானப்படை பொலிஸ் மற்றும் மாணவர் படை முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன கூறியுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சித் திட்டம் கடந்த வருடம் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ள சுமார் 22 ஆயிரம் மாணவர்களில் பத்தாயிரம் பேர் இம்மாதம் ஆரம்பமாகும் முதற்கட்ட தலைமைத்துவ பயிற்சித் திட்டத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

No comments

Powered by Blogger.