ஏ.எல். பரீட்சை முடிவுகளை www.doenets.lk முகவரியில் பார்வையிடுங்கள்
கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஞாயிற்றுக்கிழமை வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க குறிப்பிட்டார்.
பரீட்சையின் பெறுபேறுகள் காலை வெளியிடப்பட்ட பின்னர் கொழும்பு மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்கள் காலை 10 மணி முதல் தங்கள் பாடசாலைக்குரிய பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெல்வத்தை, பத்தரமுல்லயில் உள்ள பரீட்சைகள் திணைக்களத்திற்கு சமுகமளித்து அதிபர்கள் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார். வெளி மாகாணங்களுக்கான பரீட்சை பெறுபேறுகளும் நாளைய தினம் தபாலில் சேர்க்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர், சட்ட மாஅதிபர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரை அழைத்து ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய பெறுபேறுகளை விரைவில் வெளியிட முடிந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment