Header Ads



அமெரிக்கா இடதுசாரி தலைவர்களுக்கு புற்றுநோயை பரப்புகிறதா..?


அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகின்றதா என தான் சந்தேகம் கொண்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இவரைத் தவிர பரகுவே ஜனாதிபதி பெர்ணான்டோ லுகோ, பிரேசில் ஜனாதிபதி டில்மா ரௌசெப், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ஜென்டீனா ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸிற்கும் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அசட்டையாக எவர் மீதும் குற்றச்சாட்டு கூற நான் விரும்பவில்லை.அமெரிக்கா நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு நோயைப் பரப்பியிருந்தால், அது மிகக் கொடூரமான செயல். உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது என சாவிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரித் தலைவர்களுக்கு தொடர்ந்து இதுபோன்று நிகழ்ந்து வருவதை இயல்பானது என்று கூறி முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 1946- 48-ம் ஆண்டுகளில் கௌதமலா சிறையில் கைதிகளை வைத்து பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்புவது தொடர்பாக ஆய்வு செய்த நாடுதான் அமெரிக்கா எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.