ஹொங்கொங்கில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை
ஹொங்கொங்கில் பறவைக்காய்ச்சல் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு மூன்று பறவைகளிடம் எச்5என்5 ஆட்கொல்லி வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து 17 ஆயிரம் கோழிகள் அழித்தொழிக்கப்பட்டன.
ஹொங்கொங்கில் இரு நாட்டுப் பறவைகள் பறவைக்காச்சல் நோயினால் இறந்துள்ளன. அதேபோன்று அங்கிருக்கும் கோழி சந்தையிலும் ஒரு கோழியிடம் இருந்து எச் 5 என் 5 வைரஸ் கொண்ட பறைக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக நகர சுகாதார பிரதானி யொர்க்சோ குறிப்பிட்டார்.
இந்நிலையில் உயிருடனான கோழிகளை விற்கவும் இறக்குமதி செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹொங்கொங்கிலுள்ள பல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் 7 வயதுக்குக் கீழான 20 மாணவர்களுக்கு பறவைக் காய்ச்சல் நோய்க்கான ஆரம்பகட்ட நோய்க் காரணிகள் வெளிப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

Post a Comment