Header Ads



ஊடகவியலாளர் வாகனக் கடன் - சேவைக்காலம் 18 வருடங்களாக குறைந்தது

ஊடகவியலாளர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படவுள்ள வட்டியில்லா கடனை பெறுவதற்கான சேவைக்கால தகுதி 18 வருடங்களாக குறை க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் அறிவித்தார். நிதி திட்டமிடல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தல் கலந்துகொண்டு பதிலளித்துப் பேசுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை கடந்த நவம்பர் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசிய ஜனாதிபதி அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு வானங்களைக் கொள்வனவு செய்வதற்காக 12 லட்சம் ரூபா வட்டியில்லா கடனாக வழங்கப்படும் என்றார்.

இந்த கடனை பெறுவதற்கு குறித்த ஊடகவியலாளர் 25 வருட கால சேவை செய்தவராக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பாக ஊடக அமைப்புக்களும், எதிர்க்கட்சியினரும் ஆளும் தரப்பினரில் சிலரும் சேவைக்காலத் தகுதி குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.

இதனை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றோருக்கான வாகன கடன் வழங்குவதற்கான சேவைக்கால எல்லையை 18 வருடங்களாகக் குறைப்பதாகக் கூறினார். ஆளும் தரப்பினரும், எதிர்த்தரப்பினரும் மேசை மீது தட்டி ஜனாதிபதி அவர்களின் அறிவிப்புக்கு பாராட்டையும், ஆதரவையும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.