Header Ads



வடகொரிய சர்வதிகாரி மரணமடைந்தார்


வடகொரிய ஆட்சியாளர் 'கிம் ஜோங் இல்' காலமானதாக அந்நாட்டு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. 69 வயதான கிம் ஜோங் இல் 1994 ஆம் ஆண்டு முதல் வடகொரியாவின் ஆட்சியாளராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வடகொரிய அரச தொலைக்காட்சி இன்று திங்கட்கிழமை  அறிவித்துள்ளது.

தலைநகர் பியோங்கியாங்கிற்கு வெளியே ரயில் பயணமொன்றில் ஈடுபட்டிருந்த தலைவர் கிம் ஜோக் இல், அதிக உடல், உள வேலைப்பளுவினால் உயிரிழந்ததாக அரசாங்கத் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ நாடான வடகொரியாவில் முக்கிய அரசாங்கத் தகவல்கள் வெளியிடப்படுவதற்கு மிகுந்த கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் அதிபர் கிம் ஜோங் இல் உயிரிழந்த விடயமும் இரு நாட்களின் பின்னரே வெளிந்துள்ளது.

கிம் ஜோங் இல்லின் மரணத்தையடுத்து தென்கொரிய இராணுவம் அவசரகால உஷார் நிலையொன்றை பிரகடனப்படுத்தியுள்ளதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. கிம் ஜோங் இல் வடகொரியாவின் ஸ்தாபகத் தலைவர் கிம் இல் சோங்கின் புதல்வராவார்.

2 ஆம் உலக யுத்தம் முடிவடைந்தபின் சோவியத் யூனியனின் ஆதரவுடன் கொரியாவின் வடபகுதியில் கம்யூனிஸ வடகொரிய நாட்டை ஸ்தாபித்தவர் கிம் இல் சோங். 1994 ஆம் ஆண்டு அவர் தனது 82 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானதையடுத்து அவரின் மகன் கிம் ஜோங் இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 


No comments

Powered by Blogger.