மனைவியின் சிறுநீரகத்தை 5 இலட்சம் ரூபாவுக்கு விற்கமுயன்ற கணவர் கைது
தெல்தெனிய பிரதேசத்தில், மனைவியின் சிறுநீரகத்தை விற்பனை செய்ய முயற்சித்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முதியன் சேலாகே பாலித பண்டார என்ற 46 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளி ஒருவருக்கு 500,000 ரூபாவிற்கு சிறுநீரகத்தை விற்பனை செய்ய குறித்த நபர் முயற்சி செய்துள்ளார். எனினும், சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கு அவரின் மனைவி மறுப்புத் தெரிவித்ததையிட்டு, ஆத்திரமுற்ற சந்தேக நபர் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யதையடுத்து குறித்த நபரைப்பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுநீரகத்தை விற்பனை செய்வதன் மூலம் மகளின் நோய்களை குணப்படுத்தவும் வீட்டை கட்டி முடிக்கவும் முடிவும் என தெரிவித்து, சிறுநீரகத்தை விற்பனை செய்யுமாறு தம்மை பலவந்தப்படுத்தியதாக சந்தேக நபரின் மனைவி பொலிஸில் புகார் செய்துள்ளார்.
பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment