வடமாகாணப் பாடசாலைகளுக்கு மீண்டும் முஸ்லீம் ஆசிரியர்கள் நியமனம்
வடமாகாணத்தை விட்டு இடம் பெயர்ந்து ஏனைய மாகாணங்களில் உள்ள அரச பாடசாலைகளில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் வடமாகாண முஸ்லிம் ஆசிரிய உதவியாளர்கள் மீண்டும் வடமாகாணத்துக்கு இணைப்புச் செய்யப்படவுள்ளார்.07/1241/316/053 இலக்க 2007.07.11ம் திகதியுடைய அமைச்சரவைப் பத்திரம் மூலம் அனுமதிக்கப்பட்டு வடமாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டு வடமாகாணத்தில் வசித்துத் தற்பொழுது இடம்பெயர்ந்து ஏனைய மாகாணங்களில் உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்வரும் முதலாம் தவணை ஆரம்பத்தில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையைப் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
உரிய ஆசிரிய உதவியாளர்கள் தமக்கான விண்ணப்பப் படிவங்களை கடமையாற்றிக் கொண்டிருக்கும் வலயக்கல்வி அலுவலகங்களில் பெற்று பூரணப்படுத்தி 'செயலாளர்' , கல்வி அமைச்சு, வடக்கு மாகாணத்துக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு வடக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment