சாபமா..? வரமா..??
தொழிலுக்குச் செல்லும் தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை இலகுபடுத்தும் வகையில் விசேட திட்டமொன்றினை குடும்பநல சுகாதார அலுவலகம் முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய கொழும்பு குடும்பநல சுகாதார அலுவலக வளாகத்தில் குழந்தைகள் காப்பகமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியநிபுணர் தீப்தி பெரேரா கூறியுள்ளார்.
கொழும்பு நகரில் தொழில்புரியும் தாய்மார்கள் தமது குழந்தைகளை குறித்த காப்பகத்தில் ஒப்படைத்து தொழிலுக்குச் சென்று, மீண்டும் தாய்பாலூட்டுவதற்கு அங்கு வர முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இத்தகைய குழந்தைகள் காப்பகங்களை பிரதேச மட்டத்தில் ஸ்தாபிக்கவும் குடும்பநல சுகாதார அலுவலகம் உத்தேசித்துள்ளது.

Post a Comment