Header Ads



பிறந்த மண்ணிலேயே மரணிக்க உதவுங்கள் - ஹக்கீமிடம் வேண்டுகோள்

எங்களது சொந்த தாய் மண்ணில் வாழ்ந்து மரணிப்பதற்கு உதவுங்கள் என்று சமூக மதப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை,   நீதி அமைச்சர் றஊப் ஹக்கீமிடம் வினயமாகக் கேட்டுக்கொண்டார்.

1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரவாத வன்செயல் காரணமாக நாங்கள் சொந்த மண்ணையும், உடமைகளையும் இழந்து வெளியேற்றப்பட்டோம். இன்று சுமுகமான சூழ் நிலை நிலவுவதனாலும், நாட்டின் எல்லாப்பகுதியிலும் உள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்குச் சென்று குடியேறலாம் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அங்குள்ள அரச உயரதிகாரிகள் நாங்கள் குடியேறுவதை தொடர்ந்து மறுத்த வருகின்றார்கள். இதுவரை எந்த அரச நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை பாரம்பரியமாக விவசாயமே செய்து பழக்கப்பட்டதனால் இதுகாலவரை பொருளாதாரக் கஸ்டத்துடனே வாழ்ந்து வருகின்றோம்.

எனவே தயவு செய்து எங்களது தாய்மண்ணில் குடியேறி பரம்பரையாக மேற்கொண்டு வந்த விவசாயத் தொழிலை செய்வதற்கும் எங்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட உதவுங்கள் என்று அவர்கள் மிகவும் மனக்கவலையோடு வினயமாகக் கேட்டுக்கொண்டார்.
  
அமைச்சர் றஊப் ஹக்கீம், இதற்காக என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.

No comments

Powered by Blogger.