Header Ads



யாழ்ப்பாணத்தில் வக்பு சபை - சின்ன பள்ளிவாசல் குழப்பமும் தீர்ந்தது


இலங்கையின் வக்ப் சபையின் வரலாற்றில் முதற்தடவையாக முழுமையான வக்ப் சபை அங்கத்தினர்களின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான "கல நிலவரங்களை அறிவதற்கும் பள்ளிவாயல்களின் நிலைமைகளைகண்டறிவதற்குமான விஜயம் " 2011 டிசம்பர் 17 ம் 18ம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டது. 

வக்ப் சபையின் தலைவர் சப்ரி ஹலிம்டீன் (சட்டத்தரணி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி விஜயத்தின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பள்ளிவாயல்களில் விசேட ஒன்று கூடல்கள் , சந்திப்புகள்
மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தின் பள்ளிவாயல்களுக்கான ஒன்றுகூடல் மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் (சின்ன) டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகை முதல் நடைபெற்றது, யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தைச்சேர்ந்த இயக்கத்தில் உள்ள ௯ பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், மற்றும் ஊர் ஜமாஅத்தினர் முன்னிலையில் நடைபெற்ற மேற்படி ஒன்றுகூடலில் வக்ப் சபை மற்றும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் என்பன இணைந்து பின்வரும் பொது முடிவுகளை எட்டிக்கொண்டன அவை மேற்படி கூட்டத்தின் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

1- யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் பிரதேசங்களில் தற்போது முஸ்லிம்கள் மீளவும் குடியேறி வருகின்றனர், எனவே ஒரு சிலர் மிளக்குடியேறியோர் என்ற நிலையிலும் இன்னும் சிலர் மிளக்குடியேற தயராகுவோர் என்ற நிலையிலும் நோக்கப்படுகின்றார்கள். எனவே பள்ளிவாயல் நிர்வாகத் தெரிவுகளில் மேற்படி இரண்டு சாராரையும் சமமாக கணித்தல். (இங்கே ஏற்கனவே மீளக்குடியேறியோர், மீளக்குடியேறாதோர் என்ற பிரிவு இருக்கக்கூடாது ஊர் ஜமாஅத்தினர் என்ற அணுகுமுறையே இருக்கும் என்பது தீர்மானமாகும்)

2- யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான
பள்ளிவாயல்கள் அனைத்தும் ௫௦ வருடப் பழமை வாய்ந்தன அவை எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிட்ட ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் சொத்தாகவோ அல்லது இயக்கத்திற்குரிய பள்ளியகவோ இருந்ததில்லை, அவை பொதுவானவையாகவே இருந்தன அதே போல இனிவரும் காலங்களிலும் அவை பொதுவானவையாகவே இருக்கும், (இஸ்லாமிய இயக்கங்கள் தனியுரிமை கூறமுடியாது ஆனால் ஜம்இய்யதுல் உலமாவின் அங்கீகாரம் கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாமிய நடைமுறைகள் பள்ளி நிர்வாகங்களின் அனுமதியோடு மேற்கொள்ளப்பட முடியும்)

3- யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பள்ளிவாயல்களுக்கும் வக்ப் சபைக்குமிடையிலான தொடர்பாளராக செயற்படும்

போன்ற முக்கியமான மூன்று தீர்மானங்கள் பெறப்பட்ட நிலையில் ஒன்றுகூடல் மிகவும் உணர்வுபூர்வமாக நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சின்னப்பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கான நியமனக்கடிதங்கள் சின்னப்பள்ளிவாயலில் வைத்து வழங்கப்படன 15 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக சபை சின்னப்பள்ளிவாயலுக்கென நியமிக்கப்பட்டது. இதன் பின்னர் சர்ச்சைகள் ஓய்ந்து சின்னப்பள்ளிவாயல் கட்டிட நிர்மாணம் துரிதமடையும் என்பது எல்லோரது எதிர்பார்ப்புமாகும்

No comments

Powered by Blogger.