ஆபத்தான நிதிச் சந்தை நாடுகள் வரிசையில் இலங்கை - மறுக்கிறது மத்திய வங்கி
ஆபத்தான நிதிச் சந்தைக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலகின் முதனிலை கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான பிட்ச் ரேடிங் நிறுவனத்தின் புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் அதிகரிப்பினால் சொத்துக்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதாகவும் இதனால் உலகின் ஆபத்தை எதிர்நோக்கி வரும் நிதிக் கட்டமைப்புக்களில் ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது.
ஆசிய பசுபிக் பிராந்திய வலய நாடுகளின் வங்கிகளில் வழங்கப்படும் கடன்களின் அடிப்படையில் பிட்ச் ரேடிங் ஆய்வு நடத்தியுள்ளது.
இதேவேளை, பிட்ச் ரேடிங்கின் அறிக்கை பிழையானது இலங்கை மத்திய வங்கியின் ஆணையாளர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Post a Comment