நைஜீரீயாவில் 50 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
நைஜீரியாவில் வடக்குப்பகுதியில் “போகோஹராம்” என்ற பழமைவாத முஸ்லிம் பிரிவினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் அந்த மகாணத்தில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்துக்கும், இவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வரும். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பழமைவாத முஸ்லிம்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. டாமாடுரா நகரில் நடந்த மோதலில் முஸ்லிம்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். 4 ராணுவ வீரர்களும் பலியானார்கள். ராணுவத்தின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல், கலவரக்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக ராணுவ அதிகாரி அஜுபைக் இஹொஜரிக்கா கூறினார்.

Post a Comment