ஷியா பிரிவு அமைச்சரவை, பாராளுமன்றத்தை புறக்கணிப்பதே நோக்கம்
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள ஈராக் நாட்டு துணைப்பிரதமர் , குர்தீஷ் பகுதியில் புதுங்கியுள்ளார். அவர் தானாக சரணடைய வேண்டும், அல்லது குர்தீஷ் இனத்தவர்கள் அவரை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈராக்கில் அமெரிக்கப்படைகள் முற்றிலும் வாபஸ் பெறப்பட்டு வருகிறது.
.இந்நிலையில்ஈராக் துணை அதிபராக இருப்பவர் தாரிக் அல்- ஹஸ்மி. இவர் மீது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும், ஈராக்கில் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் அரசு ஊழியர்கள் பலர் பலியாயினர். இந்த தாக்குல்களுக்கு துணை அதிபர் அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது.
இவர் ஷன்னி பிரிவைச் சேர்ந்தவர் என்பதாலும், குர்தீஷ் இனத்தவருடன் சேர்ந்து கொண்டு, ஷியா பிரிவு ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த வாரம் , 5 நீதிபதிகளை கொண்ட நீதித்துறை கமிட்டி கைது வாரண்ட்பிறப்பித்தது. தற்போது ஹஸ்மி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் நெளரிஅல்-மாலிக் விடுத்துள்ள செய்தியில், துணை அதிபர் தாரிக்-அல்-ஹஸ்மிக்கு குர்தீஷ்இனத்தவர்கள் வாழும் பகுதியில் தான் பதுங்கியுள்ளார்.
தானாக சரணடைய வேண்டும், முன்பு சதாம் உசேன் பிடிப்பட்ட போது விசாரணை நியாயமாக நடந்தது. அதே போன்று தான் ஹஸ்மி மீதான விசாரணையும் நியாயமாக நடக்கும். ஈராக் அரசு எப்போதும் நீதித்துறையில் தலையிட்டதில்லை. எனவே குர்தீஷ் இனத்தவர்கள் அவரை சரணடைய சொல்ல வேண்டும் என்றார்.
இதற்கிடையே தன்மீதான குற்றச்சாட்டினை துணை அதிபர் தாரிக் அல்- ஹஸ்மி மறுத்துள்ளார். தற்போது உள்ள ஷியா பிரிவு அமைச்சரவையினையும், பாராளுமன்றத்தையும் புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்துவதே என நோக்கம் தவிர பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில்லை என்றார்.

Post a Comment