உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் யாழ்ப்பாண மாணவன் சாதனை
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுநேரத்துக்கு முன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.தற்பொழுது வெளியிடப்பட்ட கல்விப்பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உடுப்பிட்டி அமெரிக்க மிசன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடமும் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ஆனந்த நடராஜா சஞ்சயன் 3ஏ பெற்று விஞ்ஞான பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.
Post a Comment