இலங்கை இளைஞன் 257 ரீ ஷேர்ட்டுகளை ஒரேநேரத்தில் அணிந்து உலக சாதனை
கின்னஸ் சாதனை நூலில் இடம்பெறுவதற்காக இலங்கை இளைஞரான சனத் பண்டார, ஒரே நேரத்தில் அதிக ஆடைகளை அணிந்து சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் அவர் 252 ரீ ஷேர்ட்களை அணிந்து சாதனை படைத்தார். தென்கொரியாவைச் சேர்ந்த சுங் காயீ. சியோன் க்வாங் டோங் ஹோ க்வான் ஹீ என்பவர் ஒரு மணித்தியாலம் 47 நிமிடங்கள், 41 விநாடிகளில் 252 ரீ ஷேர்ட்களை அணிந்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில், 29 வயதான சனத் பண்டார ஒரு மணித்தியாலம் 7 நிமிடங்கள், 03 விநாடிகளில் 257 ரீ ஷேர்ட்களை ஒன்றின்மீது ஒன்றாக அணிந்து சாதனை படைத்துள்ளார். இச்சாதனை கின்னஸ் சாதனையாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு தனது பெயர் கின்னஸ் சாதனை நூலில் இடம்பெறும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாக சனத் பண்டார தெரிவித்தார்.
இச்சாதனைக்காக 257 ரீ ஷேர்ட்டுகளை கொள்வனவு செய்வதற்கு தான் 175,000 ரூபாவை செலவிட்டதாக அவர் கூறினார்.

Post a Comment