Header Ads



போராளிகளுடன் தொடர்பு - ஈராக் துணை ஜனாதிபதிக்கு கைது வாரண்ட்


ஈராக்கில் போராளிகளுடன தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு துணை அதிபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு்ள்ளது. வளைகுடா நாடான ஈராக்கின் துணை அதிபராக தாரிக்-அல்-ஹஸ்மி,65 உள்ளார். இவர் ஈராக்கின் ஷன்னிப்பிரிவு தலைவராக உள்ளார். இப்பிரிவினர் அந்நாட்டின் வடக்கே குர்தீஷ் இனத்தவர்கள் இணைந்து ஷியா பிரிவு அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் துணை அதிபர் தாரிக்-அல் ஹஸ்மியின் நெருங்கிய பாதுகாவலராக இருந்த குர்தீஷ் இனத்தவர் சமீபத்தில் போராளி அமைப்புடன் தொடர்பு இருந்தன் பேரில் கைதுசெய்யப்பட்டார். 

அவரிடம் நடத்திய விசாரணையில் ஈராக்கில் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு ,அந்நாட்டின் துணை அதிபர் தாரிக் அல்-ஹஸ்மிக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தார்.இதன்மூலம் போராளிகளுடன  இவருக்கு உள்ள தொடர்பிருப்பதை கூறியுள்ளார்.

இதைத்தொடந்து ஈராக் உள்துறை அமைச்சகம் மேல்நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஏடல்தாஹம் கூறுகையில், துணை அதிபரான தாரிக்-அல் ஹஸ்மியின் பாதுகாவலரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் மூலம் ஈராக்கில் நடத்திய தாக்குதல்களில் பல்வேறு அரசு அலுவலகங்கள் , அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதற்கு துணை அதிபருக்கும் தொடர்பிருப்பதை கூறியுள்ளார். 

இந்த புகாரின் பேரில் ,பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈராக்கின் 5 நீதிபதிகள் கொண்ட நீதித்துறை கமிட்டி , துணை அதிபர் மீது கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது என்றார். இவருடன் மேலும் மூன்று பாதுகாவலர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

‌ஈராக்கில் அமெரிக்கப்படைகள் முற்றிலும் வாபஸ் பெறப்பட்ட நிலையில் துணை அதிபர் மீது போராளிகளுடன  தொடர்பு அந்நாட்டில் பரபரப்பினை ஏற்படுத்தியு்ள்ளதாக ஈராக் டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது குர்தீஷ் இனத்தவர்களின் ஆதரவில் தாரிக் அல்-ஹஸ்மி பதுக்கியிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் நாட்டை விட்டு தப்பியோடிவிடாமல் இருக்க விமானநிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு்ள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.