வக்பு சட்டங்களும், யாழ் சின்னப்பள்ளி நிர்வாகிகள் நியமனமும்
யாழ் சின்னப்பள்ளிவாசல் நிர்வாகத்துக்கான நம்பிக்கையாளர் சபைக்கான நியமனக்கடிதங்கள் 18.12.2012 அன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த வக்பு சபையினரால் வழங்கப்பட்டது. வக்பு சபை சின்ன முஹிதீன் பள்ளிவாசலில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
அதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் எவ்வாறான முறையில் தொழுகைகளையும், ஏனைய செயற்பாடுகளையும் முன்னெடுத்தனவோ அதே விதமாக அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வக்பு சபை தெரிவித்தது.
வக்பு சட்டத்தின் 14:1 ஏ: பிரிவில் கூறப்பட்டுள்ளது போல பள்ளிவாசல்களின் வழமை பேணும் சரத்தின் பிரகாரம் வழமையான செயற்பாடுகள் முன்னர் இடம் பெற்றது போலவே இடம்பெற வேண்டும். செயற்பாடுகளில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் மஹல்லாவாசிகளினதும் நம்பிக்கையாளர் சபையினதும் ஏகோபித்த முடிவு அவசியம்.
தனிப்பட்ட ஒரு இயக்கம் பள்ளியை கட்டுப்படுத்தவோ கையடக்கவோ முடியாது. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவானதாகவே பள்ளிவாசல் இருக்க வேண்டும். அதேவேளை இஸ்லாமிய சரீஆ சட்டத்தின் பிரகாரம் பள்ளிவாசல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மேலும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை அங்கீகரித்த செயற்பாடுகள் பள்ளியில் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களும் வக்பு சபையால் தெளிவுபடுத்தப்பட்டன.
இதன் பின்னர் சின்னப்பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான நியமனக் கடிதங்கள் வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம் அவர்களால் உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன் பிரகாரம் கட்டிட நிர்மானக் குழுவைச் சேர்ந்த 6 பேரும் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறி வசிக்கும் 8 பேரும் அனுராதபுரத்தில் வசித்து வரும் ஒரு நபரும் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்களாக நியமனம் பெற்றனர்.
அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,
எம்.எம்.முஸாதீக்: எம்.எஸ்.முஹம்மத் ஜான்ஸின்: எம்.எஸ்.எம். மலீக்: எம்.எஸ். ஜைனூஸ்: ரி.எம். இப்திகார்: எம்.ஏ.சி. சனூன் ஆகியோர் கட்டிட நிர்மானக்குழு சார்பில் தெரிவு செய்யப்பட்டனர். ஏ.ஜி. நஸீர்: எம்.எம்.எம்.றியாஸ் : எம்.ஐ. ஜாபிர்: எம்.ரி.எம். நவாஸ்: ஐ.எம்.ஜமாலிக்: மொஹிதீன் நாஸர்: யூஸுப் அப்துல் காதர்: ஹாமீம் சுவைஸ்: ஏ.சி.ஜலீல் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நம்பிக்கையாளர் சபைக்கான நிர்வாக உத்தியோகத்தர் (தலைவர் செயலாளர் கணக்காளர் போன்ற ) தெரிவுகள் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2012 ஜனவரி 7ஆம் திகதி சனிக்கிழமை யாழ் சின்னப்பள்ளிவாசலில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: இணைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலின் முகப்பு வாலு மரைக்கார் முஹதீன் என்பவரின் வழிகாட்டலின் கீழ் நாகமணி என்ற கட்டிட பணியாளரால் கட்டப்பட்டது.
தகவல் உதவி - ஜான்ஸன்

மாஷா அல்லாஹ். சத்தியம் என்றும் ஜெயித்தே தீரும். திருத்தம் ஒன்று தேவை : 18.12.2012 18.12.2011 என திருத்தப்பட வேண்டி வரும் என நினைக்கிறேன்.
ReplyDelete