நியுஸிலாந்தின் 5.8 றிச்ட்ரர் அளவில் நில நடுக்கம்
நியுஸிலாந்தின் கிறிஸ்சேர்ச் பகுதியில் 5.8 றிச்ட்ரர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. நகரின் வட கிழக்குப் பிராந்தியத்திலிருந்து 26 கிலோமீற்றர்கள் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க பூகோளவியல் மையம் தெரிவித்துள்ளது.
எனினும் பெரிதான பாதிப்புக்கள் இடம்பெற்றதாக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விமான நிலையங்கள் மூடப்பட்டதுடன் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் அச்சத்துடன் குறித்த பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர். நியுஸிலாந்தின் கிறிஸ்சேர்ச்சில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இடம்பெறற நிலநடுக்கத்தினால் 181 பேர் உயிரிழந்திருந்தனர்.

Post a Comment