ஈரான் 10 நாள் கடற்படை போர்ப் பயிற்சியை ஆரம்பிக்கிறது
ஈரான் கடற்படையினர் 10 நாட்கள் போர் பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. எடன் வளைகுடாவின் கிழக்குப் பிராந்தியத்தில் இந்தப் போர்ப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் படைக்கட்டுமானங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பயிற்சிகள் இடம்பெறுகின்றன. பிராந்தியத்தில் போர் நிகழும் பட்சத்தில் தமது படைக்கட்டுமானங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஈரான் கடுமையான அவதானத்தை செலுத்திவருகின்றது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் ஈரான் தீவிரமான கருத்து முரண்பாடுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment