Header Ads



ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது - ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது


ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தனது பிந்திய அறிக்கையில் அணுவாயுதம் தயாரிப்புக்கு தேவையான பரிசோதனைகளை ஈரான் மேற்கொண்டிருப்பதற்குரிய அடையாளங்கள் விசாரணையில் தெரியவந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

அணுக்குண்டு ஒன்றை உற்பத்தி செய்வதற்கு உதவும் கணணி மொடல்களை தயாரிக்கும் ஆராய்ச்சி இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் குறித்த மிகவும் கடுமையான அறிக்கையாக இது அமைந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை இந்த அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டுள்ளது என்று ஈரான் கண்டித்துள்ளது. அறிக்கை நடுநிலையற்றது அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று அணுசக்தி முகவர் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஈரானின் தூதர் அலி அஸ்ஹர் சொல்டாநீஹ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.