Header Ads



இலண்டனிலிருந்து இலங்கை சென்றவர் விபத்தில் பலி - 6 பேர் காயம்


இலங்கையில் உறவினர்களுடன் விடுமுறையை கொண்டாட லண்டனிலிருந்து வந்த நபரொருவர் புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ். - நெல்லியடியிலிருந்து வந்த குறித்த நபரின் உறவினர்கள் அவரை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் பயணித்த வான் பிரிதொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லண்டனில் இருந்து வந்த யாழ். கரவெட்டியைச் சேர்ந்த தியாகராஜா செல்வரூபன் என்ற 34 வயது நபர் உயிரிழந்ததோடு படுகாயமடைந்த சிறுமி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மேலும் ஐவர் புத்தளம் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.