Header Ads



'அரசே வேலை வழங்கு' - வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு தயாராகுகின்றனர்

'வேலையற்று இருக்கும் பட்டதாரிகள் அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்!' எனக் கோரி, அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களை நடத்த இலங்கையின் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தயாராகி வருகின்றது.

வேலை வாய்ப்பற்று இருக்கும் இளைஞர் யுவதிகளை அரச பொதுச் சேவையில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு புதிய பொதுச்சேவைகள் இரண்டினை ("இலங்கை அபிருத்தி அலுவலர் சேவை" மற்றும் "இலங்கை அபிவிருத்தி உதவியாளர் சேவை") உருவாக்க உள்ளதாக அரசு கடந்த மே மாதத்தில் தெரிவித்தது.

இதில் முதல் கட்டமாக, இலங்கை அபிவிருத்தி அலுவலர் சேவையில் சுமார் 15, 000 பட்டாதாரிகளும் இலங்கை அபிவிருத்தி உதவியாளர் சேவையில் 15,000 இளைஞர் யுவதிகளும் இந்த வருட ஆகஸ்ட் மாதத்திற்குள் வேலைவாய்ப்பினை பெறுவார்கள் என அரசு கூறியது. இந்த நிலையில், 'அரச தான் கொடுத்த வாக்குறிதியை காப்பற்ற தவறிவிட்டதாகக்' கோரி, இலங்கையின் வேலையற்ற

பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு எதிரான தொடர் போராட்டம் ஒன்றிற்கு தயாராகி வருகின்றது. குறிப்பாக, அரசு முன் வைத்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திலும் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என இலங்கையின் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களிலும் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் அணைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என இலங்கையின் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே, அரசு அடுத்த ஆண்டுக்கென முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தில், நாட்டின் கல்வித் துறை எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி அதிக அக்கறை காட்டப்படவில்லை என்பதுடன் கல்வித் துறைக்கான செலவு ஒதுக்கங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) தெரிவித்துள்ளது.
 

No comments

Powered by Blogger.