உயர்தர பாடப்பிரிவை ஒன்பதாம் தரத்திலேயே தெரிவுசெய்ய புதிய திட்டம்
க.பொ.த உயர்தரத்தில் எந்தப் பாடப்பிரிவைத் தெரிவு செய்வது என்பதை ஒன்பதாம் தரத்தில் கற்கும் போதே மாணவர்கள் தீர்மாணித்துக்கொள்ளக் கூடிய வகையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.தற்போது மாணவர்கள் உயர்தரத்தில் தாம் கற்கவுள்ள பாடப் பிரிவைத் தெரிவு செய்வதற்காக க.பொ.த. சாதாரணத் தரபரீட்சை பெறுபேறுகள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதனைக் கருத்திற் கொண்டே மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,
மாணவர்கள் ஒன்பதாம் தரத்தில் கல்வி பயிலும் போதே தாம் உயர்தரத்தில் தெரிவு செய்யும் பாடத்ததை தீர்மானிக்கக் கூடிய வகையில் எதிர்வரும் 2013ம் ஆண்டளவில் இம்மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி மாணவர்கள் ஆறு பிரதான பாடங்களையும் உயர்தரப் பரீட்சைக்கு தெரிவு செய்யும் பிரிவுக்கேற்ப 3 தெரிவுப் பாடங்களையும் தெரிவு செய்து கற்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment