நரேந்திர மோடிக்கு எதிரான மற்றுமொரு முஸ்லிம் சாட்சி குத்திக்கொலை
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரும், 2002 இல் நடந்த மதக்கலவரம் தொடர்பான சாட்சிகளில் ஒருவருமான நதீம் அஹமத் சயீத் என்பவர் இன்று காலை அடையாளம் தெரியாதவர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.
ஆமதாபாத்தில், ஜுகுபுரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் சயீத் கொல்லப்பட்டார். அவர்களைக் கொன்றவர்கள் இதுவரை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான அவர், கோத்ரா கலவரம் தொடர்பாகவும், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகள் தொடர்பாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு தகவல்களைப் பெற்றிருக்கிறார். அந்தக் கலவரம் தொடர்பாக, சயீத்தின் வாக்குமூலத்தை, விசாரணை நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment