யாழ்ப்பணத்தில் குர்பான், பித்ரா கொடுப்பவர்கள் கவனத்திற்கு..!

இவ்வாறு குர்பான் கொடுப்பவர்கள் பலசமயங்களில் நகர்ப்புற மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளை மாத்திரமே இலக்குவைத்து குர்பான் இறைச்சியை பகிர்ந்தளிப்பதாகவும், இதனால் யாழ் நகர் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும், தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் வதியும் சில முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பான் இறைச்சி கிடைப்பதில்லை எனவும் யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்கு அறியமுடிகிறது.
குர்பான் இறைச்சி மாத்திரமன்று பித்ரா அரிசி உள்ளிட்டவைகளும் இவ்வாறு யாழ்ப்பணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழும் சில முஸ்லிம்களுக்கு சென்றடைவதில்லையெனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலை குறித்து யாழ்ப்பாணத்தில் குர்பான் மற்றும் பித்ரா வழங்கற் செயற்பாடுகளில் ஈடுபடும் எமது சகோதரர்கள் கவனத்திற்கொள்ள வேண்டுமென யாழ் முஸ்லிம் வலைத்தளம் வேண்டுகோள்விடுக்க விரும்புகிறது.
குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் குறித்தும் அவர்களுக்கு போய்சேர வேண்டிய குர்பான் இறைச்சி, பித்ரா மற்றும் பெருநாள் அன்பளிப்புகள் குறித்தும் இவ்வேளையில் சிறப்புக் கவனத்தை செலுத்துமாறும் நாம் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளையும் வேண்டுகிறோம். இவ்விடயத்தில் பள்ளிவாசல்கள், பிரதேச அமைப்புக்கள், செல்வந்தர்கள் மற்றும் யாழ்கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் ஆகியவற்றின் வகிபாகம் பிரதானமானதாக அமைய வேண்டுமென்பதையும் யாழ் முஸ்லிம் வலைத்தளம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
Post a Comment