Header Ads



யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்ற ஹஜ்பெருநாள் நிகழ்வுகள்

ஈதுல் அல்ஹா ஈகைத் திருநாளை யாழ்ப்பாண முஸ்லிம்களும் நேற்று திங்கட்கிழமை அமைதியான முறையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்கள்.இந்தத் திருநாள் இப்ராஹிம் வரலாறுகளில் ஒன்றாகும். இதனை முஸ்லிம்கள் தியாகத்தின் பெருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பெரிய பள்ளிவாசல் , யாழ்.முஹமதியாப் பள்ளிவாசல் மற்றும் வேலணை மங்குஸ்தான் பள்ளிவாசல் எனப் பல இடங்களில் உள்ள பள்ளி வாசல்களிலும் விசேட தொழுகைகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் தமது பெருநாளைக் கொண்டாடினர்.

நேற்றுக் காலை 7 மணி தொடக்கம் 7.30 மணி வரை முஸ்லிம் பெண்களும் காலை 8 மணி முதல் 8.30 வரை ஆண்களும் ஹஜ் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர்.முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ஜுப் பெருநாள் தக்பீர் முழக்கத்துடன் தமது வீடுகளிலிருந்து பள்ளியை நோக்கிச் சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

நேற்றுக்காலை ஹஜ் பெருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணப் பள்ளிவாசல்களில் இடம்பெற்ற விசேட தொழுகைகளில் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். தற்போது யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம்களுடன் வியாபார நோக்கத்துக்காக இங்கு வந்துள்ள முஸ்லிம்களும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் ஹஜ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
 

No comments

Powered by Blogger.