Header Ads



நாணயக் குற்றிகளை வெளியே கொண்டுவருமாறு கோரிக்கை

ஆலயங்களின் உண்டியல்களிலும் வீடுகளில் பேணப்படும் சிறுசேமிப்பு உண்டியல்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் நீண்ட காலத்துக்கு நாணயக் குற்றிகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனை சீரான கால இடைவெளியில் வெளிக்கொண்டு வரும்போது மட்டுமே வடமாகாணத்தில் நாணயக் குற்றிகளின் தட்டுப்பாட்டை நீக்க முடியும்.
  
இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் சி. கௌரிசங்கர் இவ வாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
  
சமீபகாலமாக வடமாகாணத்தில் நாணயக் குற்றிகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் நாளாந்த கொடுக்கல் வாங்கல்களில் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதற்குப் பொதுமக்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கின்றனர். ஆலயங்களில் உள்ள உண்டியல்களிலும் வீடுகளிலும் பேணப்படும் சிறு சேமிப்பு உண்டியல்களிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் நீண்ட காலத்துக்கு நாணயக் குற்றிகள் தேங்கிக் கிடக்கின்றன.
இதனை சீரான கால இடைவெளியில் வெளிக்கொண்டு வரும்போது மட்டுமே வடமாகாணத்தில் நாணயக் குற்றிகளின் தட்டுப்பாட்டை நீக்கமுடியும். எனவே பொதுமக்கள் தமது கைகளிலும், சட்டைப் பைகளிலும் நாணயக் குற்றிகளைக் கொண்டு செல்வதன் மூலம் கொடுக்கல் வாங்கல்களை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். எம்மிடம் ஒன்று சேரும் மேலதிக நாணயக் குற்றிகளை பலசரக்குக் கடைகளில் அல்லது வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
  
உண்டியல்களில் சேரும் நாணயக் குற்றிகளை மாதம் ஒரு முறையாவது வங்கிகளில் வைப்பிலிட்டுக் கொள்ளவேண்டும். பலசரக்குக் கடைகளிலும் இவ்வாறு நாணயக் குற்றிகளை வங்கிகளில் பெற்று வைத்து பரிமாற்றத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் வீண் சிரமங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்றார்.  

No comments

Powered by Blogger.