Header Ads



அட பாவிகளா..!

வட பகுதியில் சுமார் இரண்டாயிரத்து நூறு குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யவேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணவர்தன வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் ஆனந்த குமாரசுவாமி மற்றும் கதிர்காமர் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் குறித்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் பொருட்டு கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் அதுவரை அம் மக்களை தங்கவைப்பதற்காக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் சுமார் 600 ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த அப்பகுதியில் தலா 4 பேர்ச் வீதம் ஆயிரம் காணித் துண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் சுமார் 200 குடும்பங்களை அந்த பிரதேசத்தில் மீள குடியேற்றத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1990 ஆம் ஆண்டு வடக்கிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களில் அரைவாசிப் பேரே தற்போது வடமாகாணத்தில் மீளக்குடியேறியுள்ள நிலையில், அந்த அரசாங்க அமைச்சர் ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்பது குழப்பமாகவே உள்ளது.

வடக்கிலிருந்து புலிகளின் பலாத்கார வெளியேற்றத்திற்கு உட்பட்ட முஸ்லிம்கள் தென்னிலங்கையில் வாழுவது இந்த அரசாங்க அமைச்சரின் கண்களுக்கு விளங்கவில்லையா? அல்லது அமைச்சரை வழிநடத்தும் அதிகாரிகள் குருடர்களா?? அல்லது இந்த பாவத்தனமான செய்திகளை படித்துவிட்டும் மௌனிகளாக இருக்கப்போகும் முஸ்லிம் அமைப்புக்கள் ஊமையர்களா..???

No comments

Powered by Blogger.