Header Ads



யாழ் சின்னப் பள்ளிவாசலும், புலம்பெயர் யாழ் முஸ்லிம்களின் உதவிகளும்

முஹம்மத் ஜான்ஸின்

யாழ் சின்னப் பள்ளிவாசலுக்கு இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் பெறுமதியான மலசலகூட கட்டிடத்தை அமைத்துக் கொடுப்பதற்கு ஐக்கிய இராச்சியத்திலுள்ள சிறிலங்கா முஸ்லிம் சாரிடி (சதகதுல் ஜாரியா) அமைப்பு முன்வந்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் முக்கிய உறுப்பினரான பாரூக் அஸ்கர் யாழ் சின்னப் பள்ளிவாசல் கட்டிட புனரமைப்புக் குழுவின் செயலாளர் ஜான்ஸின் அவர்களுக்கு தகவலொன்றை வழங்கியுள்ளார்.

இதற்கான நிதி நவம்பரில் சங்கத்தின் வங்கிக் கணக்கிலிடப்படுமென அறிய வருகின்றது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடை வழங்கியோருக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆரோக்கியமான ஆயுளையும் அவர்களின் ஈருலக வாழ்க்கைiயுயும் வெற்றியானதாக ஆக்கி அருள்வானாக! ஆமீன்.

மேலும் வரும் 06-11-2011 ஞாயிறு அன்று லண்டனில் யாழ் முஸ்லிம் சங்கமும் தமது வருடாந்த ஒன்றுகூடலை நடத்தவுள்ளது. இந்தநிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் சின்னப் பள்ளிவாசலின் கட்டிட வேலைகள்  ரூம் வேலைகள் பெண்கள் தங்குமிட கட்டிடம் போன்றவற்றுக்கான உதவிகளை இந்த சங்கம் மூலமும் செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்றை செய்யப் போவதாக எஸ்.ஏ.சி.எம். பாயிஸ் தெரிவித்துள்ளார்கள்.

இவரது முயற்சிக்காகவும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கட்டிட புனரமைப்புக் குழு சார்பில் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

எமது வங்கி இலக்கம்:
A/C Name: Jaffna Small Masjid Reconstruction & Welfare Committee
Current A/C No: 093010121406
Hatton National Bank
Dehiwela Branch
Sri Lanka

No comments

Powered by Blogger.