Header Ads



தனியார் சொத்துக்களை மஹிந்த அரசாங்கம் கொள்ளையடிக்கிறது


நட்டமைந்த தனியார் நிறுவனங்களை மீளக்கட்டியெழுப்பும் பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு உண்மையில் ராஜபக்ஷ் அரசாங்கத்தின் தனியார் சொத்து கொள்ளையிடும் சட்டமூலம் எனப் பெயரிடப்பட்டிருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

இறுதி நேரத்தில் அமைச்சரவையில் சட்டமூலத்தின் பெயர் மாற்றப்பட்டாலும் அதன் உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார். எந்தவொரு ஏற்றுக் கொள்ள முடியாத சட்டமூலமாக இருந்தாலும் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் மனிதர்கள் அன்றி சமிக்ஞை தூண்கள் இருப்பதால் உயிர்மீது உள்ள ஆசையால் பலர் கையுயர்த்துவர் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

நட்டமடைந்துள்ள நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றால் அது மீள் கட்டியெழுப்பப்படுவதற்கு பதிலாக மேலும் நட்டத்திலேயே தள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.  சட்டமூலம் நிறைவேற்றப்படுவதை தவிர்க்க முடியாது எனத் தெரிவித்த மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தபின் அதனை ரத்து செய்ய மாத்திரமே முடியும் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.