Header Ads



சவூதியில் இலங்கை பெண் கொலை - சந்தேகத்தில் கணவன், மனைவி கைது


சவூதி அரேபியா றியாத் மலீஸ் நகரில் இலங்கையர் ஒருவர் நடத்தும் ஹோட்டலில் இலங்கைப் பெண்னொருவர் படுகோலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெணணின் சகோதரி தெரிவித்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஹோட்டல்  காசாளர் தங்கியிருந்த அறையிலிருந்து கொள்கலன் ஒன்றிருந்து கண்டெடுக்கப்பட்டதையடுத்தே ஹோட்டல் காசாளர் மற்றுமு; அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையுண்ட பெண்ணின் அடையாள அட்டை மற்றும் பணப்பை நகரசபையின் குப்பைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.. சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக எழுந்த சர்ச்சையே இப்படுகொலைக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து அறியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.