Header Ads



அஜ்மல் கசாப்பை தூக்கில் போடுங்கள் - இந்தியாவிடம் கெஞ்சுகிறது பாகிஸ்தான்


மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கசாப், பயங்கவாதி என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மாலத்தீவில் ந‌டைபெற்று வரும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அஜ்மல் கசாப் பயங்கரவாதி என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை என்றும், அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் விசாரணைக்குழு, விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளது. விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மும்பை தாக்குதல் குறித்து கருத்து இதுவ‌ரை கருத்து தெரிவிக்காமல் இருந்த பாகிஸ்தான், தற்போது கசாப் பயங்கரவாதி என்பதை ஒத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கசாப்பிற்கு பயிற்சி பாகிஸ்தானில் தான் வழங்கப்பட்டது என்று இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கூறிவருவது நினைவிருக்கலாம். 

No comments

Powered by Blogger.