''வடக்கு முஸ்லிம்களின் வரலாறு - மீளலுக்கான அவா''
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு சட்டத்திற்கும், சமூகத்திற்குமான அறநிலையத்தினால் நியமிக்கப்பட்ட பிரஜைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.230 பக்கங்கள் அடங்கிய வடக்கு முஸ்லிம்களின் வரலாறு, மீளலுக்கான அவா எனும் தலைப்பில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. 9 பேர் கொண்ட இந்த ஆணைக்குழு கலாநிதி தேவநேசன் நேசையா, கலாநிதி அனஸ், கலாநிதி கதரீன் ப்ரன், கலாநிதி கமீலா சமரசிங்க, கலாநிதி சந்திரசேகரம், கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, ஜாவித் யூசுப், கலாநிதி கொடிகார மற்றுமு; ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் மஜீத் ஆகியோரை உறப்பினர்களாக கொண்டிருந்தது.
கடந்த அக்டோபர் மாதம், செப்டெம்பர் மாதம் முதல் தனது விசாரணைகளை ஆரம்பித்த இந்த ஆணைக்குழு, புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் 22 விசாரணை அமர்வுகளை நடத்தி, 354 தனிநபர்களினதும், 13 குழுக்களினதும் வாக்குமூலங்களையும் பெற்றுள்ளது.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை காணும் வகையிலும் அரசாங்கம், முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைமைகள், உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகள் என்பவற்றுக்கான பரிந்துரைகளும் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள.
வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் பூர்த்தியாகிற நிலையில், இவ்வெளியேற்றம் தொடர்பில் இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இதுவே விரிவான விபரங்களையும், கள ஆய்வினையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆணைக்குழுவின் செயற்திட்ட முகாமையாளராக கலாநிதி பர்ஸானா ஹனீபா செயற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment