அட்டாளைச்சேனை முஸ்லிம்கள் இராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகரிலுள்ள தமது குடியிருப்பு மற்றும் மேட்டுநில பயிர்ச்செய்கை நிலங்களில் இராணுவத்தினர் அத்துமீறி இராணுவ முகாம்களை அமைத்து வருவதைக் கண்டித்து இன்று செவ்வாய்கிழமை அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு சொந்தமான காணிகளில் தாம் நுளைவதைத் தடுத்துவரும் இராணுவத்தினரை அங்கிருந்து உடனடியாக வெளியேறும் படியும் கோரிக்கை விடுத்தனர். ஒலுவில் அஷ்ரப் நகர்ப் பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் தற்போது சிறிய மினி முகாம்களை அமைத்துள்ளதுடன், குறித்த பகுதியில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment